நடிகர் ரஜினியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ( CDP) வெளியாகியுள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு CDP அதாவது காமன் டிபியை வெளியிடுவது தற்சமயம் ட்ரெண்டாகியுள்ள ஒரு கலாச்சாரம். அதை ரசிகர்கள் அல்லது நடிகர், நடிகைகள், திரைப்பிரபலங்கள் வெளியிடுவார்கள். நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுவதையடுத்து அவருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காமன் டிபியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஆனந்த்ராஜ், சிவகார்த்திகேயன், இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வெளியீட்டு தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த CDP படத்தில் ரஜினிகாந்த் தமிழக சட்டப்பேரவை கட்டிடமான ஜார்ஜ் கோட்டையில் அமர்வது போன்றும், மக்கள் அவர் பின்னே அணிவகுப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் சிவாஜி ராவ் குதிரையில் செல்வது, பேருந்து நடத்துனர் பணி மற்றும் அவரது சினிமாத்துறை விளக்கும் படங்களும், அரியணையில் அமர்வது போன்றும் பல்வேறு குறியீடுகளை சூட்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சுகளுக்கு முடிவு கட்டும் விதமாக சென்ற வாரம் ரஜினி வெளியிட்ட அறிவிப்பும், தற்போது அரசியல் களம் அமைப்பது போன்ற தனது பிறந்தநாள் காமன் டிபியும் ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.