ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடந்த 22ம் தேதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்போ, அல்லது அதற்கான அறிகுறியோ காணப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு சீரானதும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.