நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது என ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று பிற்பகல் முடிவு செய்யப்படும் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த்துக்கு எடுக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் கவலை அளிக்கும் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலையை இன்று பிற்பகல் மருத்துவக் குழுவினர் பரிசோதித்த பின்னர், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.