முக்கியச் செய்திகள் விளையாட்டு

நடராஜனுக்கு ஒரு விதி? விராட் கோலிக்கு ஒரு விதியா?- சுனில் கவாஸ்கர் சாடல்!

நடராஜனுக்கு ஒரு விதி? கேப்டன் விராட் கோலிக்கு ஒரு விதியா? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது மனைவியின் பிரசவத்திற்காக கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். அவரது விடுமுறை தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணியில் புதிதாக வந்த நடராஜனுக்கு ஒரு விதி? கேப்டன் விராட் கோலிக்கு ஒரு விதியா? என கவாஸ்கர் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். பிறக்கப் போகும் குழந்தையை பார்க்க விராட் கோலிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நடராஜன் தனது முதல் குழந்தையை இதுவரை பார்க்காததை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ‘ஐபிஎல் போட்டியின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு தேர்வான அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கும் இந்திய அணி தொடரை வென்றதற்கு நடராஜனின் ஆட்டம் முக்கியமானது.

தற்போது டெஸ்ட் போட்டிகளுக்காக அவர் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். அதுவும் அணியில் இடம்பெறாமல் வலைப்பந்து வீச்சாளராக மட்டும் பயன்படுத்தப்படுகிறார். அவர் தொடர் முடிந்த பிறகு ஜனவரி மூன்றாவது வாரத்தில் தான் தனது மகளை பார்க்க முடியும். ஆனால் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, தனது முதல் குழந்தையின் வரவுக்காக தாயகம் திரும்புகிறார். இதுதான் இந்திய கிரிக்கெட்’என பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தீவிரம்

G SaravanaKumar

‘ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி

Arivazhagan Chinnasamy

தீரன் பட பாணியில் புனே சென்று திருடர்களை கைது செய்த போலீஸ்

G SaravanaKumar

Leave a Reply