ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்களிடம், Me too என பதிலளித்த இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆஸ்திரேலியவின் சிட்னி மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேற்றைய போட்டியில் மட்டுமே மூன்று முறை தோனியின் பெயர் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஷிகர் தவானை ஸ்டம்பிங் செய்ய ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (Matthew Wade) முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் தவானை அவுட் செய்யமுடியவில்லை. அப்போது வேட், தவானிடம், “நான் தோனியைப்போல வேகமாக ஸ்டம்பிங் செய்யவில்லை” எனக்கூறியுள்ளார், அதற்கு ஷிகர் தவானும் ஆம் என பதில் அளித்துள்ளார். போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்த ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், ஹர்திக் பாண்டியா, தோனியைப்போல விளையாடி போட்டியை வெற்றிகரமாக முடித்ததாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யும்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலியிடம் ரசிகர்கள் சிலர், ‘We Miss You Dhoni’ (நாங்கள் தோனியை மிஸ் செய்கிறோம்) என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை காண்பித்தனர். அதனைப் பார்த்த விராட் கோலி ‘Me Too’என பதிலளித்தார். இந்த சம்பவங்களால் ட்விட்டரில் தோனியின் ரசிகர்கள் #MSDhoni என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து, தோனியை புகழ்ந்து கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.