செய்திகள்

தோனிக்கு நியூஸ்7 தமிழ் நேயரின் வாழ்த்து கவிதை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்ததை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் நேயர் தோனிக்கு கவிதை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 


தோணியாக கரை சேர்த்து

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தலைவனெனும் பண்பில் உயர்ந்து

துறவியை மிஞ்சும் பொறுமை காத்து

தேவைப்பட துவம்சம் செய்து

தோல்வி பயம் என்றும் இன்றி

தோல்வியின் விளிம்பில் இருக்கும் போதும்

தோனி இருக்க தைரியம் உண்டு!

திறமை ஒன்றே உபயம் என்று

தூற்றுவார் போற்றுவார் கவலையின்றி

தேறுவார் யாரென்று அடையாளம் கண்டு

தோளோடு தோள் அவண் நின்று

தன் திறனில் தனித்தே சென்று

தவம் போல் பதினாறு வருடத்தில்

தப்பும் உண்டு! தவறும் உண்டு

தப்பித்தவர் எவருண்டு?! இருந்தும்

தன் சாதனை கர்ஜிக்கும்

இவன் யாரென்று!

பயணம் ஒன்று நிறுத்தம் வந்து

தன் வழியில் விடையும் சொல்ல

தருணமும் (19:29) அந்நொடி

தவித்தே போனது! 

தோனி! தோனி! தோனி! 

என்ற சத்தம் ஒலித்த சகாப்தம் நீ!

தொனியே சொல்லும் 

இவன் என்றும் சிங்கமென்று! 

இனி சரித்திரம் சொல்லும்

இவன் என்றும் சிகரமென்று! 
                   
                                       -தமிழ்ப்பிரியன்

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இது புதுசால்ல இருக்கு.. ’நேசமணி, கோவாலு, கிச்னமூர்த்தி..’ மீண்டும் டிரெண்டான வைகை புயல்!

Gayathri Venkatesan

IPL 2021: MI VS PBKS – இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற போகும் அணி எது?

G SaravanaKumar

அதிமுகவின் நலத்திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் காகித பூ : ப.சிதம்பரம்!

Halley Karthik

Leave a Reply