இலக்கியம்

தொல் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!

தொல் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் காலமானார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த தொ. பரமசிவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 70.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்க்சியம் மற்றும் பெரியாரியத்தின் அடிப்படையில் தொல் தமிழ் பண்பாட்டு தளங்களில் ஆய்வு மேற்கொண்டவர் பரமசிவன். சமணர் கால கல்வெட்டு உள்ளிட்ட தொல் தமிழ் சான்றுகளை புத்தகங்களில் வெளிகொணர்ந்தவர்.

அறியப்படாத தமிழகம், இதுவே சனநாயகம், நான் இந்துவல்ல நீங்கள், செவ்வி, சமயங்களின் அரசியல், தெய்வங்களும் சமூக மரபுகளும் உள்ளிட்ட வரலாற்று நூல்களை எழுதிய தொ.பரமசிவன், ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தொல் தமிழ் பண்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர். தொ.பரமசிவனுக்கு கடந்த ஆண்டு தமிழ் ரத்னாவில் இலக்கிய ரத்னா விருது வழங்கி கவுரவித்தது நியூஸ்7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

Arivazhagan Chinnasamy

மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Halley Karthik

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!

Dhamotharan

Leave a Reply