தமிழகம்

தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால், தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று மற்ற அருவிகளை ரசித்தும், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக உள்ளதால், மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது.

3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் காலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5- மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டம் காரணமாக கோவில் சண்முகவிலாஸ் மண்டபத்திற்கு முன்பு, தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் 6,000 போலீசார் குவிப்பு

EZHILARASAN D

வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோத ரிசார்ட்டுகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதிகள் காட்டம்

EZHILARASAN D

ஸ்கேட்டிங் சாதனை மேற்கொண்ட இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

Leave a Reply