5 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சிதம்பரம் அருகே தில்லை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சுபிதா நகரில் கைக்குழந்தை உட்பட 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 4 நாட்களாக வெளியில் வரமுடியாமல் தவித்து வந்தனர். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு நேற்று போன் மூலமாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கடலூர் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். மீட்புக்குழு உதவியுடன் சிதம்பரம் நகர போலீஸாரும் இணைந்து நான்கு நாட்களாக தண்ணீர் சூழ்ந்த பகுதியில் தவித்து வந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட அவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்