சில உயிரினங்களின் விஷம் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் மருத்துவத் துறையில் இதன் பயன்கள் ஏராளம். பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கு இந்த விஷம் பயன்படுகிறது.
இதனை அறிந்த எகிப்தை சேர்ந்த நபர் ஒருவர் தேள்களை தேடுவதற்காக தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டார். காடு, மலைகள் என தேள்கள், பாம்புகளை தேடி தனது பயணத்தை தொடர்ந்தார். மருத்துவ பயனுக்காக இவற்றின் விஷத்தை சேகரிப்பதே அவரது வேலை. தற்போது 25 வயதான அந்த இளைஞர், Cairo Venom கம்பெனியின் நிறுவனராக உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவரது நிறுவனத்தில் 80,000க்கும் அதிகமான தேள்கள் மற்றும் பாம்புகள் இருக்கின்றன. புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி அவற்றில் இருந்து விஷத்தை பிரித்தெடுக்கின்றனர். மருத்துவத் துறையில் இவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
தேள்களின் ஒரு கிராம் விஷம் 10 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம்) விற்பனை செய்யப்படுகிறது. இவை ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.