தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை, என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை போரூரில், உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், பிரேமலதா விஜயகாந்த் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணிக்கு தான், வெற்றி நிச்சயம் எனவும், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், புத்தாண்டுக்கு பின், தேமுதிகவின் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் எனவும், அதிமுகவிடம் இருந்து பிரச்சாரத்துக்கு, தற்போது எந்த அழைப்பும் வரவில்லை, எனவும் கூறினார். அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், எனினும் தங்கள் பணியை தாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.