முக்கியச் செய்திகள் சினிமா

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜின் மகள்?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவரது மகள் திவ்யா சமூக செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். ஊட்டச்சத்து நிபுணரான அவர், பலருக்கு உதவி செய்து வரும் செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அவருக்கு அரசியல் மீது ஆர்வம் இருப்பதாகவும், கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் விரைவில் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக சத்யராஜ் தெரிவித்துள்ளார். தனது மகளின் அரசியல் பாதையில் தகப்பனாகவும், நண்பனாகவும் பக்கபலமாக இருப்பேன் என கூறியுள்ளார். அவர் எந்தக் கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

’புனித் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: நடிகர் சூர்யா

Halley Karthik

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசைக்கு வயது ‘80’

EZHILARASAN D

Leave a Reply