தேர்தலில் நிற்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மீனவரணி சார்பில், மீன் விற்கும் மகளிருக்கு விற்பனைக்கான பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நடுக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பூ, பாஜக சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் முதல் பக்க செய்தியில் வரும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஜினி கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ, ஜனநாயக ரீதியாக யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றார். அதேபோல், கமல் நல்ல நண்பர் என்றும், தன்னை திட்டுவதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது என்றும் குஷ்பூ கூறினார்.