தமிழகம்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் நாளை விஜயகாந்த் அவசர ஆலோசனை

அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது. எனினும் இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். இதையடுத்து இன்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக உடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை நடைபெற உள்ள தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement:

Related posts

தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

Ezhilarasan

பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்: சபாநாயகர் அறிவிப்பு!

Nandhakumar

அதிகரிக்கும் கொரோனா; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு!

Ezhilarasan