இந்தியா

தெலங்கானாவில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலி!

தெலங்கானாவில், ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் செட்டிபள்ளி தாண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் முமின்பேட்டையில் கூலி வேலைக்காக இன்று காலை செல்வதற்கு ஷேர் ஆட்டோவில் எறினர். அப்போது ஆட்டோவில் 5 கூலித் தொழிலாளர்கள் இருந்த நிலையில் மேலும் சில கூலி தொழிலாளர்கள் வர வேண்டி இருந்ததால் சாலையோரம் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது பார்வதி பேட்டையிலிருந்து அரசு பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில் முமின்பேட்டையில் இருந்து வந்த லாரி பேருந்தை முந்திச் செல்ல முயன்று எதிர்திசையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் மோதி கவிழ்து விபத்துக்குள்ளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் லாரியின் அடியில் சிக்கி ஆட்டோ நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த சோனாபாய், சந்தியா, சோனு, நிதீன், ரேணுகா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவிற்கு வெளியே இருந்த கூலித் தொழிலாளர்களும் படுகாயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களை முமின் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. ஒரே கிராமத்தை சேர்ந்த 7 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்

Halley Karthik

நவராத்திரி உடை கட்டுப்பாடு: சர்ச்சையை அடுத்து வாபஸ் பெற்றது யூனியன் வங்கி

Halley Karthik

மகாராஷ்டிர அமைச்சரவை நாளை விரிவாக்கம்?

Mohan Dass

Leave a Reply