முக்கியச் செய்திகள் தமிழகம்

தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் ராகுல்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இரண்டாம் கட்டமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின் போது ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் ஜல்லிகட்டு போட்டிகளை கண்டுகளித்ததுடன், பொங்கல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தொடர்ந்து 23 முதல் 25ஆம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இரண்டாம் கட்டமாக வரும் 14,15, 16 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். 6 மாவட்டங்களில் நாளொன்றுக்கு 120கிலோமீட்டர் தொலைவு பரப்புரை மேற்கொள்ளும் வகையில் பரப்புரை பணிகளை தமிழக காங்கிஸ் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

ஐபிஎல் ரத்து: நாட்டுக்குத் திரும்பிய 8 இங்கிலாந்து வீரர்கள்!

Halley karthi

வீட்டிலேயே பிரசவம்; கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸுக்கு தேவையில்லை: ராகுல் ஆவேசம்

Ezhilarasan

Leave a Reply