உலகம்

துருக்கியில் மருத்துவமனையில் தீ விபத்து; ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் 9 கொரோனா நோயாளிகள் பலி!

துருக்கியின் காசியான்டெப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக துருக்கியும் இருந்து வருகிறது. இங்கு வைரஸ் பாதிப்பை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து தென்கிழக்கில் அமைந்துள்ள காசியான்டெப் நகரில் தனியாக இயங்கும் சாங்கோ பல்கலைக்கழக மருத்துவமனையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 14 கொரோனா நோயாளிகளும் மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த உயர் அழுத்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என காசியான்டெப் மாகாண ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்பு

Jayakarthi

இன்ஸ்டாவில் எகிறிய லைக்ஸ் – சாதனை படைத்த மெஸ்ஸியின் போட்டோ

EZHILARASAN D

தாக்க தயார்நிலையில் இருக்கும் ரஷ்ய வீரர்கள்

G SaravanaKumar

Leave a Reply