குற்றம்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது!

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 57 லட்சம் மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேரின் கணினி மற்றும் மடிக்கணினிகளில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 8 பேரின் உள்ளாடைகளில் மறைத்து எடுத்துவந்த தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 8 பேரை கைது செய்த சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்லூரியில் சீட் கேட்டு மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

Web Editor

மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

Web Editor

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பறித்து சென்ற கும்பல் – அம்மா பேரவை செயலாளர் மீது புகார்

Dinesh A

Leave a Reply