கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளில் 100% இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 100 சதவிகித இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தொற்று தடுப்பில் கடைபிடிக்க வேண்டிய நிலையான நடைமுறைகளை மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். அதில், திரையரங்குகளில் உரிய இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பதிவுகளுக்கு டிஜிட்டல் பண பரிமாற்றத்தையே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடிட்டோரியங்கள், பொது பகுதிகளில் ஒருநபருக்கும் இன்னொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திரையரங்குகள், ஆடிட்டோரியங்களில் பார்வையாளர்கள் உள்ளேசெல்லும் வழிகள், வெளியேறும் வழிகளில் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்வதை கட்டாயம் ஆக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முகக்கவசங்களை அணிவோர் மூக்கு, வாய் ஆகியவை மூடும்படி அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். எச்சில்துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், பார்வையாளர்கள் தங்களது மொபைலில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பார்வையாளர்கள் உடல்நலக்குறைவோடு இருப்பது அறியப்பட்டால் சுகாதாராத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.