தமிழகம்

“திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” – ஆர். பி உதயகுமார்

இலங்கையில் ராமர் கட்டிய பாலம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது போலவே மதுரை திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலத்தில் 33.47 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நில எடுப்பிற்கு அரசாணையும், இந்த திட்டத்திற்குரிய அரசாணையும் ஆகிய இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டடு இதற்காக 33.47 கோடியில் ஒதுக்கீட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ராமர் பாலம் அமைத்துக் கொடுத்தாரே அதே போல் திருமங்கலத்திற்கு இந்தபாலம் அமைத்துக் கொடுப்பதினால் இந்தப் பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து இலங்கையில் அமைந்துள்ள பாலம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது அதேபோல் இந்த திருமங்கலத்தில் அமையவுளள் ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!

Halley Karthik

விக்ரமில் ஒன்றிணையும் உச்சநட்சத்திரங்கள்!

Vel Prasanth

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11-ம் தேதி தொடக்கம்!

Ezhilarasan