திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வருவோருக்கு பிரசாதம் வழங்காததால் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் சுவாமிக்கு படைக்கப்படும் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, சிறிய லட்டு போன்ற பிரசாதங்களை தொன்னையில் வழங்குவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக தீர்த்தம் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில், அன்னப் பிரசாதம் மற்றும் சிறிய லட்டு வழங்கப்பட்டு வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வருவோருக்கு எந்தவித பிரசாதமும் வழங்கப்படுவதில்லை என பக்தர்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் காலி ஆகிவிட்டது எனக்கூறி தேவஸ்தான அதிகாரிகள் அவர்களை வெளியேற்றியுள்ளனர். இதனை அடுத்து கோயிலை விட்டு வெளியே வரும்போது, தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.