திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 4 விண்ணப்பங்கள் வந்த நிலையில் சூரியூரில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தவகையில் இவ்வாண்டு திருச்சி மாவட்டத்தில் சூரியூர், பொத்தமேட்டுபட்டி, தெற்கு இருங்களூர், ஆவாரங்காடு ஆகிய நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் சூரியூரில் மட்டுமே இம்மாதம் (ஜனவரி ) ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை மறுதினம் 15ஆம் தேதி சிறப்பாக நடத்த விழாகுழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.