செய்திகள்

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரை சோதனை செய்த போது 24.57 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு கடத்த இருந்த அந்த டாலர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதே போல் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த மலேசியாவை சேர்ந்த அக்ரோசியா முகமது இப்ராஹிம் என்ற பெண்மணியை சோதனை செய்த போது, அவரது உடைமையில் 500 மட்டும் 2000 ரூபாய் இந்திய நோட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.21 லட்சம். வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும்: மல்லை சத்யா

Halley Karthik

நிதி மோசடி வழக்கு: ஆரக்கல் இந்தியா நிறுவன தலைவருக்கு நோட்டீஸ்!

Vandhana

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை; லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை

Web Editor