தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1500 பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த விழாவை பாஜக தேசிய தலைவர் நட்டா தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழர் பண்பாட்டை காக்க எங்களை தவிர இங்கு யாருக்கும் அருகதை இல்லை எனவும்,வெற்றிவேல் யாத்திரை நடத்தி தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உணர்த்தினோம் என பேசினார். பாஜக கோரிக்கையான தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்பு பாஜக தேசிய தலைவர் நட்டா பேசுகையில், திருவள்ளுவர் படைத்த திருக்குறள் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகத்தின் பழைமையான மொழி தமிழ் மொழி. ஆதி காலத்தில் ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் மண்ணில் தற்போது நிற்பது பெருமை அளிக்கிறது. 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமை அளிக்கிறது. திருப்பூர் குமரன், வேலுநாச்சியார், பாரதியார் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, பூலித்தேவர் முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்டோர் தமிழகத்திற்காக பெரும் சேவைகளை புரிந்துள்ளனர்.
கலாச்சாரத்தில் தமிழகத்தை முன்னோடியாகவும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நரேந்திர மோடி அவர்கள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சுகாதாரம் போக்குவரத்து, நெடுஞ்சாலை, வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் பல்லாயிரம் கோடிகள் செலவழித்து மத்திய அரசு தமிழகத்தை மேம்படுத்தி வருகிறது
13,000 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது இதற்காக நிலங்களை ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரே மாநிலம் தமிழகம். உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில் இந்தியாவில் நரேந்திர மோடி முன்னின்று நோய் தொற்றை எதிர்த்து அதனை முழுமையாய் கட்டுப்படுத்தினார்.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றை கட்டுபடுத்தியது. பாரதிய ஜனதா கட்சி தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவை மேம்படுத்தி வருகிறது. எனவும் பேசினார்.