திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் தனது மனைவியை பாஜக எம்பி செளமித்ரா கான் விவாகரத்து செய்யவுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு பிஷ்னுபூர் தொகுதியில் நின்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செளமித்ரா கான். இவர் கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன் பிஷ்னுபூர் தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பியாக உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பாஜக எம்பி செளமித்ரா கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான் சமீபத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவரது கணவரும் பாஜக எம்பியுமான செளமித்ரா கான் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எம்.பி செளமித்ரா கான் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சொந்த தொகுதிக்குகள் வரக்கூடாது என நீதிமன்றம் உத்தர விட்டிருந்த வேலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தனியாலாக நின்று சுஜாதா மொண்டல் கான் தனது கனவருக்காக பரப்புரை மேற்கொண்டார். மேலும் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடியுடன் இணைந்து பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பாஜக எம்பி செளமிதரா கான், அரசியலால் தனக்கும் தனது மனைவிக்கும் இருந்த 10 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. நான் தற்போது பாஜகாவில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளர். இதனிடையே கணவரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுஜாதா மொண்டல் கான், குடும்பமும் அரசியலும் வேறு வேறு, இருப்பினும் தனது கணவர் தனது முடிவை அறிவித்துவிட்டார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவர் ஒருநாள் உண்மையை புரிந்துகொள்வார். அவர் அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் வந்து இணையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.