தமிழகம்

தியேட்டர் இருக்கை பிரச்னை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!

நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி தொடர்பான அரசாணையை திரும்ப பெற்ற தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டி உள்ளது.

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கிய அரசாணைக்கு எதிரான வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கை வசதிகளுடனேயே திரையரங்குகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10%, 30%, 50% என திரையரங்கம் எப்படி இயங்கினாலும், தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாதிட்டார். அதற்கான செலவீனங்களை கையாள வேண்டும் என்பதால், கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். எனவே, கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்குமாறு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு அறிவுறுத்தினர்.

மேலும், திரையரங்குகளில் அதிக கூட்டம் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூய்மை பணியாளர்களுக்கு இடவசதி: தலைமை செயலாளர் கடிதம்

Halley Karthik

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்

EZHILARASAN D

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி; ஆசிரியர் கைது

EZHILARASAN D

Leave a Reply