நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் மாத வெளியீட்டிற்காக தயாராகி வந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக திரைத்துறை சம்பந்தமான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டதால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.பல தடங்கலுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகாலை முதல் காட்சியாக ரசிகர்கள் காட்சி பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.பெரிய நடிகர்கள் படம் என்றால் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும், சலசலப்புகள் ஏற்படுவது வழக்கமே.

மாறாக மதுரை திருநகர் 2வது ஸ்டாப்பில் அமைந்துள்ள தேவி கலைவாணி தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக தியேட்டருக்குள் கொண்டாடினர். தீயிட்டு வெடிகளை கொழுத்தியதால், தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்ட நிர்வாகம் உடனடியாக தீயை அணைத்து சரிசெய்தது. அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும், எவ்வித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.