முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்பிறகு சேத்துப்பட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயக்குமார், பின்னர் 12 மணி அளவில் எழும்பூரில் உள்ள ஜார்ஜ்டவுன் 15வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், எழும்பூர் ஜார்ஜ் டவுன் 15 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் தலைமையில் இந்த விசாரணையானது நடைபெற்றது.

விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கைது மனுவுக்கு எதிராக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர் இதில் போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்ட மனுவை ஏற்று மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை இது குறித்து விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு

Web Editor

மருங்காபுரி ஜமீன் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

Web Editor

ஜிம்மி கிம்மல் கேட்ட கேள்வி; சாதுரியமாக பதிலளித்த மலாலா!

Jayasheeba