முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக தான் அதிமுகவில் இணையும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதிமுக திமுகவில் இணைந்துவிடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திமுக தான் அதிமுகவில் இணையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே கே நகர் பகுதியில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்கு காரணம். ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.

அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். வாக்கு வங்கி குறையவில்லை.வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை என்பதே உண்மை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அதிமுக திமுகவில் இணைந்துவிடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

திமுக தான் அதிமுகவில் இணையும். பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம் அது எப்போதும் வளரும் கட்சி அதனால்தான்,அவர்கள் அப்படி தான் சொல்வார்கள்.தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும்.மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி20 உலக கோப்பை; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

G SaravanaKumar

இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது தெரியுமா?

Arivazhagan Chinnasamy

விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு

Saravana