செய்திகள்

திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது: முதல்வர் பழனிசாமி

திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டதாகவும், அதிமுகவில் மட்டுமே உழைப்பவர்களுக்கு மரியாதை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சட்டமன்ற தேர்தலுக்காக தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கினார். நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள ஆட்டையம்பட்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தித்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

மக்களுக்கு பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் கிடைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் குறித்து திமுகவினர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.நாமக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். அப்போது ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியில் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுங்களை பொதுமக்களிடம் விநியோகித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் உள்ள விவேக்குமார் என்பவர் வீட்டிற்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேனீர் அருந்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2022-ம் ஆண்டில் ‘ஹேக்’ செய்யப்பட்ட 50 அரசு இணையதளங்கள் – மத்திய அமைச்சர் தகவல்

Web Editor

தீயில் சிக்கிய சிறுத்தைக் குட்டிகளை மீட்ட வனத்துறையினர்

G SaravanaKumar

சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்? – உயர்நீதிமன்றம் கேள்வி

Web Editor

Leave a Reply