முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை என கூறிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது

Vandhana

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது! – ஜி.கே.வாசன்

Nandhakumar

தமிழர்களுக்கு எதிரான கூட்டணி திமுக கூட்டணி: ஜேபி நட்டா

Halley karthi

Leave a Reply