திமுகவின் கிராம சபை கூட்டம் செயற்கையானது, என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் நரிமேட்டில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கூடுதலாக 1000 அம்மா மினி கிளினிக் தொடங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகவும், திமுகவின் கிராம சபை கூட்டம் செயற்கையானது என்பதால், அவற்றால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்