திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், 3-M ஸ்டிக்கர்கள் ஒட்டினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும், என்ற தமிழக அரசின் உத்தரவை லாரி உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்தலாம், என்ற நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திட்டமிட்டபடி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தயாராக உள்ளதாகவும், தெரிவித்தார்.