தமிழகம்

தாய்க்கு இணையாக மாடுகள் கருதப்படுகிறது: பன்வாரிலால் புரோகித்

மாடுகளின் கோமியம் மூலம் புற்றுநோய் குணம் அடைய வாய்ப்புள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓட்டேரி கோசாலையில் நடைபெற்ற கோபூஜையில், பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாடுகளுக்கு பூஜை செய்தும், அவற்றுக்கு கீரை, சர்க்கரை பொங்கல், பழங்கள் உள்ளிட்ட உணவுகளையும் வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் பேசிய ஆளுநர், தாய்க்கு இணையாக மாடுகள் கருதப்படுவதாகவும், 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த ’கோ’சாலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை சேவை மனப்பான்மையோடு பராமரித்து வருவதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கோ சாலையில் பெறபடும் மாடுகளின் கழிவுகள் மூலம் புற்றுநோய் குணம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதோடு அதற்கான ஆய்வுகளும் நடந்துவருகிறது எனவே இந்த கோஸ் வகையைச் சேர்ந்தவர்கள் அந்த ஆய்வுகள் நடக்கும் இடத்திற்குச் சென்று அவற்றை தெரிந்துகொண்டு மாடுகளின் கோமியம் மூலம் பெறப்படும் கழிவுகளை மருத்துவரீதியாக பயன்படுத்தலாமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கோசாலையில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!

Gayathri Venkatesan

தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

G SaravanaKumar

அணு ஆயுதப் போர் நடத்தும் திட்டம் இல்லை: ரஷ்யா

Halley Karthik

Leave a Reply