முக்கியச் செய்திகள் விளையாட்டு

தரவரிசை பட்டியலில் கோலிக்கு பின்னடைவு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராத் கோலி பின்தங்கியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இரண்டு இடங்களில் தொடர்கின்றனர். 3வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 862 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர்களில் புஜாரா ஒரு இடங்கள் முன்னேறி 7வது இடத்திலும், ரகானே இரண்டு இடங்கள் பின்தங்கி 9 வது இடத்திலும் உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பந்து வீச்சாளார்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் முதலிடத்தில் தொடர்கிறார். முதல் 10 இடங்களுக்கான புள்ளிப் பட்டியலில், இந்தியா சார்பில் 2 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 8-வது இடத்துக்கும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 9 வது இடத்துக்கும் முன்னேறினர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 3-வது இடத்தில் உள்ளார். மற்றோரு இந்திய வீரர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 6 வது இடம் பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தரமற்ற பொருட்களை வழங்கி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம்; ஓபிஎஸ் கண்டனம்

G SaravanaKumar

சர்வாதிகாரமான அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: பழனிவேல் தியாகராஜன்

EZHILARASAN D

கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிப்பு!

Jeba Arul Robinson

Leave a Reply