2016 – 2019ம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டை, நேரடியாக கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்க கோரி, திருமங்கலத்தை சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி 20% தமிழ் வழி இட ஒதுக்கீடு திருத்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாதங்களாக காத்திருப்பில் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநரின் தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்புள்ளது, தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 20% தமிழ் வழி இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.