ஆசிரியர் தேர்வு தமிழகம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வழங்கப்பட உள்ளன.

2021 ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதார ர்களுக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், அரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கொண்ட பொங்கல் பை ஜனவரி நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து குடும்ப அட்டை தார ர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் தருவதற்காக தமிழக அரசு 5 ஆயிரத்து 604 கோடி ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பைகளை விநியோகம் செய்வதற்காக இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதா ர ர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களுக்கே வந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்குவார்கள்.
ரேஷன் கடைகள் முன்பு தேவையற்ற நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க ஜனவரி நான்காம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினமும் 200 பேர்களுக்கு மிகாமல் பொங்கல் பரிசு கொடுப்பதற்கான டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் தங்களுக்கான பொங்கல் பரிசுகளை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் காலையில் 100 டோக்கன்களுக்கும், மாலையில் 100 டோக்கன்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டோக்கன்களில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசை வாங்க இயலாத விடுபட்ட நபர்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளுக்கான பரிசுப் பொருட்களை ஜனவரி 13ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வரும்போது குடும்ப அட்டைதார ர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் ரேஷன் கடைகளுக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி நேரப்படி ஒரு மீட்டர் தனிமனித இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement:

Related posts

சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு!

Arun

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனைக்குத் தயங்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி

Halley karthi

ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ezhilarasan

Leave a Reply