ஆசிரியர் தேர்வு தமிழகம்

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் விழா வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக கலையரங்கில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் பிரபாகர் நிறைவேற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை ஏசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இன்று காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், கிறிஸ்து பிறப்பு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கி 10 மணி வரை நடைபெற்றது, சிறப்பு திருப்பலியில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயரும் தமிழக ஆயர்கள் பேரவை தலைவருமான அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.

நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொது மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனையில் கலந்து கொண்டனர், சிறப்பு திருப்பலியில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் ஆயர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக இயேசு கிறிஸ்துவின் குழந்தை உருவ பொம்மையை மேடையில் வைத்து பூஜித்து ஆராதனைகள் செய்து திருப்பலியை நடத்தி வைத்தனர்.

திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் நகர் மத்தியில் அமைந்துள்ள தூய வளனார் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் தேவாலயத்தில் பிரம்மாண்ட குடில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கரோன கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் நிரைவேற்ற மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உத்தரவிட்டுள்ளதால் திருப்பளிக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து சமுக இடைவெளியுடன் தேவாலயத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த திருப்பளியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்டு இறை அருள் பெற்றுச் சென்றனர்.சிவகங்கையில் உள்ள அலங்கார அன்னை தேவாலயத்தில் கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலியில் ஏராளமான மக்கள் திரண்டுவந்ததுடன் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசங்கள் அனிந்து பங்கேற்றனர். ஆலயம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலித்தது. தேவாலயத்திற்குள் அமைக்கப்பட்ட குடில் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடந்த காலங்களைவிட சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் அமைதியான முறையிலும் சிறப்பான முறையிலும் நடைபெற்றன. செயின்ட் ஜோசப் புனித தேவாலயம் வண்ண விளக்குகளாலும் மக்களின் பிரார்த்தனைகளாலும் புத்துணர்ச்சி பெற்றிருந்தது. கொரோனா தொற்று காரணமாக நேர கட்டுப்பாட்டுகளுடன் பிராத்தனை நடைபெற்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர். செங்கை மறைமாவட்ட முதன்மை குரு நீதிநாதர் திருப்பலியை நிறைவு செய்தார்.

ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கட்டுப் பாடுகளுடன் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது, பங்கு தந்தை கிரிகோர ராஜன்,தலைமையில் 9 மணிக்கு தொடங்கிய சிறப்பு பாடல் திருப்பலி இரவு 10 மணி வரை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் துதி ஆராதனைகளும் நடைபெற்றன. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தேவாலயம், கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்டவைகளில் சிறப்பு ஆராதனைகளும் சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல் நடனம் உள்ளிட்டவைகளும் நடைபெற்றன. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு ஆராதனைகளும் துதிப் பாடல்களும் பாடி இன்று மண்ணுலகில் அவதரித்த இயேசு கிறிஸ்துவை சிறப்பு ஆராதனை செய்து பிரார்த்தித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெலிகாப்டர் விபத்து; ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு

Arivazhagan Chinnasamy

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

Vandhana

“ஸ்ரீரங்கம் பெருமாளை பெரியார் வழிபடுவதாகவே கருதுகிறேன்”- டிடிவி தினகரன்

Web Editor

Leave a Reply