பாஜகவின் தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கருத்துக்களை தவிர மற்ற நிர்வாகிகளின் கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துகொள்ள முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி ஒன்றியத்தில் 46 லட்சம் மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனமாக இருப்பதாக கூறினார். அதிமுகவை நிராகரிக்கிறோம் என கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதாகவும், அதேபோல் திமுகவை விரட்டியடிப்போம் என தாங்கள் தீர்மானம் போட்டு கூட்டம் போட ரொம்ப நேரம் ஆகாது என்றும் விமர்சனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் மௌனமாக சென்றது குறித்து பேசிய கடம்பூர் ராஜூ, ”மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி” என்றார்.
தேமுதிக இடம் பெறும் கட்சி தான் வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘அவர்களது கட்சியை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள அப்படி சொல்கிறார்கள். தேர்தல் வருகிற நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இயற்கையாக சொல்லக் கூடியது தான். அதில் மாறுபட்ட கருத்து இல்லை’ என தெரிவித்தார்.