தமிழகம்

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில், வளிமண்டலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் உயரம் உரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை தென் கடலோர மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 11 சென்டி மீட்டரும், பரமக்குடி, பரங்கிப்பேட்டை தலா 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா பரவல் எதிரொலி; முதல்வர் அவசர ஆலோசனை

G SaravanaKumar

அதிமுக அலுவலகம்: உச்சநீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ் தரப்பு

EZHILARASAN D

தமிழகத்தில் பாஜக பொய் பிரசாரம் செய்கிறது- மாணிக்கம் தாகூர் எம்.பி.

G SaravanaKumar

Leave a Reply