தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியுள்ளது.
30 ஆண்டுக்கும் மேலாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி சட்டசபையில் தமிழக அரசு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக 8 மாதத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனி மாவட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியுள்ளது. புதிய மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக மக்கள் வைத்த கோரிக்கை நிறைவேறும் இந்நாள் இப்பகுதி மக்களின் பொன்னாள் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.