தமிழகம்

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் ஜெயலலிதா. இந்திய அரசியல் வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்த பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர். அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் அவரது நினைவால் தமிழக அரசியல் நிறைந்திருக்கிறது.

அதிரடி திருப்பங்கள் கொண்ட ஒரு திரைக்கதையைப் போலவே ஜெயலலிதாவின் வாழ்க்கையும் இருந்தது. அவர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது தந்தை ஜெயராமன் இறந்து விட்டார். தாய் சந்தியா, தம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் கான்வென்ட்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தார் ஜெயலலிதா. ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. பள்ளி மாணவியாக இருந்தபோதே ஆங்கில பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் காட்டினார். ஆங்கில நாவல்கள் படிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். பல ஆயிரக்கணக்கான ஆங்கில புத்தகங்கள் அடங்கிய நூலகத்தையே அவர் போயஸ்கார்டனில் வைத்திருந்தார். சட்டப்படிப்பு படித்து வழக்கறிஞராகவோ அல்லது உயர் கல்வி படித்து பேராசிரியராகவோ பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. ஜெயலலிதா பள்ளி மாணவியாக இருந்தபோது அவரது தாய் சந்தியா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவையும் நடிக்கும்படி வற்புறுத்தினார். படிப்பின் மீது கொண்ட பற்றால் முதலில் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அம்மாவின் பிடிவாதத்தின் பேரில் நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


வெண்ணிற ஆடையில் அறிமுகம் ஆன அவருக்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் என்று கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. அவரது வாழ்க்கை திசைமாறியது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தி.மு.க-வுக்காக பிரசார மேடைகளில் வலம் வந்தார்.
எம்.ஜி.ஆர் தனிகட்சி தொடங்கிய பின்னர் 1982ஆம் ஆண்டு அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். ”பெண்ணின் பெருமை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் மூலம், தனது பேச்சாற்றலையும் பதியவைத்தார்.
அ.தி.மு.க-வில் சேர்ந்த அடுத்த ஆண்டே ஜெயலலிதாவுக்குக் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். டெல்லி அரசியலிலும் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் முன்னிலைப்படுத்தினார். ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா பிரசாரத்தில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர் உடல்நலம் பெற்றுத் திரும்பிய நிலையில் அப்போதைய அரசியல் சூழல் காரணமாக அரசியல் ஆர்வம் இன்றி இருந்தார். அப்போதுதான் சசிகலா உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டி வைக்கப்பட்ட வாகனத்தில் இருந்து ஜெயலலிதா இறக்கிவிடப்பட்ட சம்பவம் அவரது வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு அணியும் என அ.தி.மு.க இரண்டாக பிளவு பட்டது. 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி வரிசையில் ஜெயலலிதா அமர்ந்தார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதலாவது பெண் எதிர்கட்சித்தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 1991-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அனுதாபம் காரணமாக அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது. முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அப்போது அவரது ஆட்சி மீது சுப்பிரமணியம் சுவாமி, தி.மு.க சார்பில் பல முறைகேடு புகார்கள் முன் வைக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து ஆட்சியை இழந்தார். 1996ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோற்க காரணமாக இருந்த மூப்பனாருடன் இணைந்து 2001-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.

பிளசண்டே ஹோட்டல் வழக்கு காரணமாக பதவியை இழந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால் இரண்டாவது முறையாக எதிர்கட்சித் தலைவரானார். 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு எதிராக விஜயகாந்தின் தே.மு.தி.க உடன் கூட்டணி அமைத்து பெரும் வெற்றி பெற்றார். அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். மேல் முறையீடு வழக்கில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் ஏறினார். செப்டம்பர் 22-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். மீண்டும் வீடு திரும்பாமலேயே டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். தமிழகத்தின் பெண் ஆளுமை மறைந்தது. இன்றுவரை அவரது வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவண்ணாமலையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க தடை

Arivazhagan Chinnasamy

‘சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும்’ – பாஜக

Arivazhagan Chinnasamy

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Web Editor

Leave a Reply