சினிமா

தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு சிக்கல்..!

பட்டாசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்த படத்தின் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி சிவாஜி சமூக நலப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கர்ணன் என்றாலே நினைவில் நிற்பது சிவாஜி கணேசனின் படம்தான். ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்தவகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கனவே ”திருவிளையாடல்“ என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்பிறகு “திருவிளையாடல் ஆரம்பம்“ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரைப்படம் வெளிவந்தது. அதே சமயத்தில் தாங்கள் நடித்து வெளிவந்த “உத்தமபுத்திரன்“ திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போல சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பெயரை மாற்றக்கோரியிருப்பது படக்குழுவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த பிரச்னையில் நடிகர் தனுஷுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #கர்ணன்DHANUSH என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியன் 2 படத்தில் புது முயற்சியை செய்து முடித்த கமல்ஹாசன்!

EZHILARASAN D

கடவுளின் தேசத்திலும் கல்லா கட்டும் “விக்ரம்”

Web Editor

லாரன்ஸ் – வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி-2

Vel Prasanth

Leave a Reply