அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அவர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் மாலை சென்னை வந்தடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், டிச.31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.