முக்கியச் செய்திகள்

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2,783 பேருக்கும் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 2 ஆயிரத்து 783 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறினார். முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். இது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டிய மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை 12 மையங்கள் மூலமும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 166 மையங்கள் மூலமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மக்கள் அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். தடுப்பூசி போடும் பணி இன்று முதல் முழுவீச்சில் நடைபெறும் என்றும், இதுவரை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 6 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறினார். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு காய்ச்சல் இருமல் போன்ற எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு

Web Editor

ஆற்று வெள்ளத்தில் அசத்தல் ஓட்டல்: தனித்துவமான தாய் ரெஸ்டாரன்ட்

Halley Karthik

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

G SaravanaKumar

Leave a Reply