முக்கியச் செய்திகள் செய்திகள்

தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின. கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்த மாணவர்கள், உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். யாருக்கும் இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என கூறிய ராதாகிருஷ்ணன், தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை மாநகராட்சியில் ரூ.220.64 கோடி சொத்து வரி வசூல்

EZHILARASAN D

அனைவரும் ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகமாகும்?-முன்னாள் அமைச்சர் வளர்மதி

Web Editor

பாலியல் புகார்-சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் கைது

Web Editor

Leave a Reply