கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஐசிசி அறிவித்துள்ளதற்காக ஐசிசி மற்றும் தனது ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வீரர்களை அறிவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது குடும்பத்தினர் , பயிற்சியாளர், நண்பர்கள், இந்த தசாப்தத்தில் எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை பி.சி.சி.ஐ எனக்கு வழங்கியது. இதனை எனது மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தருணத்தில் தசாப்தத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு தன்னை பரிந்துரைத்த ஐசிசி மற்றும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் மீது நம்பிக்கை வைத்து சரியான காரணங்களுக்காக விளையாட்டை விளையாடுகிறீர்கள் என்றால், எந்த கனவும் அடைய முடியும் என்பதை இந்த பயணத்தின் மூலம் நான் உணர்ந்தேன். சவால்கள் மற்றும் தடைகள் எதுவாக இருந்தாலும், இந்த நம்பிக்கையுடன் நீங்கள் தொடர்ந்து முன்னேறினால், உங்கள் கனவுகள் யதார்த்தமாக மாறுவதைக் காண்பீர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
‘