யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் குலசேகரப்பட்டினம் தசரா நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்தாண்டு நடைபெறும் தசரா நிகழ்ச்சி வழக்கம் போல் கடற்கரையில் நடத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடற்கரை பகுதியில் விழா நடத்த அனுமதி அளித்தால் அருகே உள்ள பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்டோபர் 6-ஆம் தேதி பக்தர்கள் அனுமதியின்றி கொடியேற்றம் நடைபெறும் என்றும் அக்டோபர் 7 முதல் 15-ம் தேதி வரை 6 முதல் 8 மணி வரை மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 11 நாட்கள் திருவிழாவும் யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரலை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.