விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அடலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்திவ் வேடும் ஜோ பர்ன்ஸும் சிறப்பான தொட்டக்கத்தை அளித்தனர். இருப்பினும் பும்ராவின் சிறப்பான பந்து வீச்சால் இருவரும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்படும் ஷ்டீவ் ஸ்மித்தை 1 ரன்னில் அஸ்வின் தனது சுழலில் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 73 ரன்களையும் மார்னஸ் 47 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை பொருத்தவரை அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 53 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’10 வருஷமா அணியில் ஒரு மாற்றமும் பண்ணலை’ : தோனி பெருமை!

Halley Karthik

ஜிம்பாவே த்ரில் வெற்றி; 1 ரன் வித்தியாசத்தில் பாக். அதிர்ச்சி தோல்வி

EZHILARASAN D

சென்னை ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனையை வீழ்த்திய சிறுமி

EZHILARASAN D

Leave a Reply