விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி ஹரியானா எல்லைக்கு சென்ற 28 வயதான சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டங்களில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி. இவர் போராட்டத்தின் மூலம் கவனம் பெற்றதை தொடர்ந்து உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பில்கிஸ் தாதி டெல்லி ஷரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தெரிவித்திருந்த அவர், நான் விவசாயி மகள். இன்று போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக செல்வோம், குரல் எழுப்புவோம், அரசு எங்களின் பேச்சை கேட்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.